Monday 28 November 2011

உயிருக்கு ஆபத்தான நிலையில் தினமலர் நிருபர்;டைலர் கடையில் அனுமதி


உயிருக்கு ஆபத்தான நிலையில் தினமலர் நிருபர்;டைலர் கடையில் அனுமதி 
கும்ப்ரிகாம்பேட்டை,நவ.31
                           தமிழ் உணர்வாளர்கள் நடத்திய கூட்டதிற்கு செய்தி சேகரிக்க சென்ற தினமலர் நிருபரை அடையாளம் கண்டு கொண்ட தமிழ் உணர்வாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்து இருந்த பேட்டை ரௌடிகள் மற்றும் பிக்பாக்கெட் திருடர்கள் கொலை செய்யும் நோக்கத்துடன் நமது நிருபரை நோக்கி கேள்வி எழுப்பினர்.சற்றும் அசராத நமது நிருபர் ஐயோ,அம்மா விட்ருங்க ஏதும் செஞ்சுராதீங்க என போர்க்குரல் எழுப்பினார்.நிருபரின் வீரத்தைக் கண்டு அஞ்சிய கூட்டத்தினர் நிருபரை நெருங்கவும்,தயவு செஞ்சு அடிக்காதீங்க என அதே வீரத்துடன் கைகளை உயர்த்தினார்.இந்த கொலை முயற்சியில் ஏற்கனவே தையல் விட்டுருந்த அக்குள் பகுதியில் நமது நிருபரின் சட்டை 10 cm அளவிற்கு கிழிந்து விட்டது.இதனால் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ராயல் டைலர் கடையில் நமது நிருபர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அடுத்த கொலை முயற்சி:
                        மதுரை பகுதியில் நடந்த இதே போன்ற ஒரு கூட்டதிற்கு செய்தி சேகரிக்க சென்ற நமது மற்று ஒரு நிருபர் கூட்டத்தில் அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பிறகு,யாருக்கும் அஞ்சாமல் வெகு வேகமாக தப்பி ஓடியுள்ளார்.அவரை வாகனங்களில் துரத்திய கூட்டத்தினர் அவர் மீது வாகனத்தை ஏற்றி கொல்லும் முடிவில் இருந்ததாகவும், பொதுவாக பன்றிகள் மீது வாகனம் ஏறினால் நல்லது அல்ல என்ற இந்து மத சம்பிராதயப்படி அவர்கள் பின் வாங்கி சென்று விட்டதாகவும் தெரிகிறது.இப்படியாக இந்து மதம் தனது உயிரை காப்பற்றியது என நிருபர் நன்றியுடன் தெரிவித்தார்.

வெனிசுலா?

தென் அமெரிக்காவின் நாடுகளுள் ஒன்று வெனிசுலா.கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக ஹுகோ சாவேஸ் அதிபராக உள்ளார்.அதி தீவிர இடதுசாரி.
2003ம் ஆண்டு.
நாட்டை சுரண்டிக் கொண்டு இருந்த பன்னாட்டு எண்ணை நிறுவனங்களை நாட்டை விட்டு விரட்டி எண்ணை நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கினார்.ஆரம்பத்தில் இவரை கோமாளியாக சித்தரிக்க முயன்று இவரது அரசை கவிழ்த்த 'முன்னேறிய'நாடுகள்,தங்கள் முயற்சியில் தோற்று இவர் முன் வைத்த மக்கள் நல திட்டங்களை குறை கூறிக் கொண்டு இருந்தன.
இது 2011ம் ஆண்டு.
முதலாளித்துவத்தின் தாயகமான அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து நடு தெருவில் போராடி வருகின்றனர்.சிக்கன முயற்சி என்ற பெயரில் அமெரிக்க அரசு பல மக்கள் நல திட்டங்களை இரத்து செய்து வருகிறது.

வெனிசுலா?
 நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்கள் அனைவருக்கும் அவர்களின் ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம்நூறு அமெரிக்க டாலர் மதிப்பிற்கு குழந்தைகளை நலமாக வளர்க்கும் பொருட்டு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.(Rs.5100/-)
  கர்பிணி பெண்களுக்கு மாதம் நூறு அமெரிக்க டாலர் (Rs.5100/-)
   உடல் ஊனமுற்ற மாற்று திறனாளிகளுக்கு மாதம் 150அமெரிக்க டாலர் .(Rs.7550-)
    இத்தனைக்கும் அங்கு மக்களின் சராசரி மாத வருமானம் முந்நூறு டாலர்கள் தான்.(Rs.15000/-)
                எண்ணை நிறுவனங்களை நாட்டு உடைமை ஆக்கியதால் கிடைத்த வருமானம் அனைத்தும் முறையாக அணைத்து மக்களுக்கும் பகிர்ந்து வழங்கப் படுவதற்கான முதல் படி இது.லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
             கம்யூனிசம் தோற்று விட்டது,செத்து விட்டது என்று பேசுபவர்களுக்கு இது தான் பதில்.

Saturday 26 November 2011

வால் மார்டும்,மளிகை கடை அண்ணாச்சியும்

பலசரக்கு விற்பனையிலும் பன்னாட்டு நிறுவனங்கள் கால் பதிக்க அனுமதித்து இருக்கிறது மத்திய அரசு.
தங்கள் சுய லாபத்திற்காக இந்நாட்டின் நிலம்,காற்று,நீர் எல்லாவற்றையும் மாசு படுத்த காரணமான பெரு முதலாளிகள் பின்னர் நீருக்கும் பணம் பிடுங்கி மக்களை சுரண்டிக்கொண்டு உள்ளனர்.இப்பொழுது தங்களின் புதிய பங்காளிகளாக பன்னாட்டு நிறுவனங்களை இரு கரம் விரித்து வரவேற்கின்றனர்.இப்படி இந்திய முதலாளி வர்க்கம் தனக்குத் தானே தீ வைத்து கொள்வதற்கு நாம் குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட சாட்சிகளாக இருப்போம்.
தெருவுக்குத் தெரு கடை வைத்து மக்களில் ஒருவராக பிழைத்த சிறு வியாபாரிகள்,இந்திய பெரு முதலாளிகளான ரிலையன்ஸ்,பிர்லா போன்றவர்கள் சூப்பர் மார்கெட்,ஷாப்பிங் மால் போன்றவற்றை நிர்ணயித்ததால் கூலித் தொழிலாளர்களாக மாறி போனதற்கு நான்,நீங்கள் எல்லோரும் சாட்சிகள் தானே.இந்த சூப்பர் மார்கெட்,ஷாப்பிங் மால் எல்லாம் கூடிய சீக்கிரம் பன்னாட்டு கம்பனிகளால் விலை பேசப்பட்டு கபாளீகரம் செய்யப்படும்.
மளிகை கடை அண்ணாச்சிகளை பெரு முதலாளிகள் கூலித் தொழிலாளர்களாக மாற்றியதுப் போல,பன்னாட்டு நிறுவனங்கள் பெரு முதலாளிகளை தரகர்களாக தரம் இறக்கும்.
பன்னாட்டு நிறுவனங்கள் பலசரக்கு கடை திறப்பதால் இங்கு வேலை வாய்ப்பு பெருகும் என்கிறார் வர்த்தக அமைச்சர்.இந்த நிறுவனங்களின் தாய் வீடான அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு வேலை இல்லாதோர் சதவீதம் 15% ஆக அதிகரித்து மக்கள் கொந்தளித்து வீதிகளில் இறங்கி போராடி கொண்டு இருக்கும் செய்தி இவரை எட்ட வில்லை போலும்.
சீனா பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்து உள்ளதை காரணம் காட்டுகிறார்.சீனா ஒரு உற்பத்தி நாடு.அங்கு தயாரிப்பதை அங்கேயே விற்பனை செய்வதால்,உற்பத்தி பெருகும்,பொருளாதாரம் வளரும்.இந்தியா உற்பத்தி செய்வதை விட அதிகம் இறக்குமதி செய்து வரும் சூழலில் யார் இதனால் பயன் அடைவார் எனபது சிறுவர்களுக்கு கூட தெரியும்.
ஒரு விதத்தில் இது நல்லது தான்.தவிர்க்க இயலாத ஒரு புரட்சியை நோக்கி உலக மக்கள் உந்தப் பட்டு வரும் சூழ்நிலையில், 1000 உள்ளூர் முதலாளிகளை எதிர்த்து போராடுவதை விட அவர்களை விலைக்கு வாங்கவுள்ள 10 வெளிநாட்டு முதலாளிகளை எதிர்த்து நிற்பது எளிது.
இலக்குகள் குறைந்தால் வெற்றி எளிதாகும் தானே.
படம்: அமெரிக்க முதலாளி வர்க்கத்தை எதிர்த்து போராடும் ஒரு இளம் பெண் மீது மிளகு ஸ்ப்ரே அடிக்கும் போலீஸ் 

Friday 25 November 2011

ஒ! மார்க்ஸ்

வரலாற்றில் ஒவ்வொரு சம்பவமும் இரு முறை நடக்கும்.
முதல் முறை அது கேலிக்கூத்தாக இருக்கும்.
இரண்டாவது முறை அது துன்பியல் சம்பவமாக இருக்கும்.

மூன்றாவது முறை ?

       கடுப்ப கிளப்பாதீங்க பா.
              எவ்வளவோ பட்டும் நீங்க மூணாவது முறையும் ஓட்டு போட்டு ஆட்சி அமைக்க வைப்பீங்கன்னு கார்ல் மார்க்ஸ் கனவா கண்டாரு?